ரஜினியின் ‘அண்ணாத்த’ படம் கைவிடப்பட்டதா? – படக்குழு விளக்கம்

ரஜினி நடித்துவந்த அண்ணாத்த படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் தகவல் பரவிய நிலையில், படக்குழு அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கும் அண்ணாத்த படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கி ஐதராபாத் திரைப்பட நகரில் விறுவிறுப்பாக நடந்தது. ஆனால் திடீரென்று கிளம்பிய கொரோனா பரவலால் படப்பிடிப்பு நின்று போனது. கிட்டத்தட்ட 4 மாதங்களாக படப்பிடிப்பு முடங்கி இருக்கிறது.

மீண்டும் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பதில் நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. படப்பிடிப்பில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கும் நிலை இருப்பதால் கொரோனா முற்றிலும் ஒழிந்த பிறகே படப்பிடிப்பை தொடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு திரைக்கு வருவதாக இருந்த இந்த படத்தை பொங்கல் பண்டிகைக்கு தள்ளி வைத்தனர்.

படப்பிடிப்புகளை தொடங்குவதில் மேலும் தாமதம் ஏற்பட்டு வருதால் பொங்கலுக்கு படம் ரிலீசாகுமா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இன்னும் 50 சதவீத படப்பிடிப்புகள் பாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அண்ணாத்த படம் கைவிடப்பட்டு விட்டதாகவும் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்து விட்டதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை எற்படுத்தியது. இதனை படக்குழுவினர் மறுத்தனர். அண்ணாத்த படத்தை கைவிட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். அனுமதி கிடைத்ததும் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்படும்” என்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!