அடிக்கடி இனிமேல் ‘அந்த’ விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம்..!!! அரசு அதிரடி முடிவு..!!


இனிமேல் கண்ட நேரத்தில் எல்லாம் ‘காண்டம்’ விளம்பரத்தை டிவியில் காட்ட முடியாது. மத்திய அரசு டிவி சேனல்களுக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தலில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் அம்மா, அப்பா, பிள்ளை குட்டிகளோடு உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும்போது, திடீரென ஒரு ஆணும், பெண்ணும் ஒரு சிறு பாக்கெட்டை கையில் பிடித்தபடி கட்டிலில் கட்டி உருளும் காட்சிகள் வெளியாகிறதா?

உங்களை அப்படியே ரிமோட் பக்கம் கையை கொண்டு செல்ல வைக்கிறதா?


இது ஏதோ உங்களுக்கு மட்டும் நடக்கும் நெளிய வைக்கும் நிகழ்வு கிடையாது. இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களின் பெரியவர்களும், சிறியவர்களும் இதுபோன்ற ஆணுறை விளம்பரங்களை பார்த்து அசடு வழியத்தான் உட்கார்ந்துள்ளனர்.

இந்த நிலையை மாற்றத்தான் மத்திய அரசு புதிய நெறிமுறையை பிறப்பித்துள்ளது. டிவி சேனல்கள் இனிமேல் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே ஆணுறை விளம்பரத்தை காட்ட முடியுமே தவிர, எல்லா நேரத்திலும் காண்பிக்க முடியாது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே ஆணுறை விளம்பரத்தை காண்பிக்க வேண்டும் என்று அரசு நேற்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. சிறுவர்கள் கண்களில் இந்த விளம்பரங்கள் தென்பட கூடாது என்பதே நோக்கம்.


குழந்தைகள் பாதுகாப்பு, ஆரோக்கியமற்ற பழக்கங்களை அவர்கள் பின்பற்றுவதை தடுத்தல் ஆகிய விதிமுறைகளின்கீழ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

சிறு வயதிலேயே செக்ஸ் குறித்து வெளிப்படையாக பேசும் கலாசாரம் நம்முடையது கிடையாது. எனவே, சிறுவர்கள் மனதில் இதுபோன்ற விளம்பரங்கள் எளிதில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இப்படியொரு தடையை பிறப்பித்துள்ளதாக கூறுகிறார்கள் அரசு வட்டாரத்தில்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!