விஜய்யின் தெறி 2 வேண்டும்! பிரபலம் கருத்து, முழு விவரம் உள்ளே..

அட்லீ இயக்கத்தில் ராஜா ராணி படத்திற்கு பிறகு அட்லீ தளபதி விஜய்யை வைத்து இயக்கிய படம் தான் தெறி .

இப்படத்தில் இருந்து தான் விஜய் – அட்லீ எனும் இந்த வசூல் வேட்டை கூட்டணி முதன் முறையாக இணைய துவங்கியது.

மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிகை எமி ஜாக்சன் மற்றும் முன்னணி நடிகை சமந்தா நடித்திருந்தனர்.

விஜய்க்கு மகளாக நடிகை மீனாவின் மகள் நைநிக்க நடித்திருந்தார். அந்த தந்தை மகள் கம்போவை நம்மால் எழிதளவில் மறந்துவிட முடியாது.

மேலும் தெறி படமே வசூலில் கிட்டத்தட்ட 150 கோடி வரை வசூல் செய்து மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தை சன் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்திருந்தது.

இதனை பார்த்த பிக் பாஸ் பிரபலம் தர்ஷன், தனது சமூக வலைதள பக்கத்தில் தெறி 2 மீண்டும் வேண்டும் என ரசிகர்களிடம் கேள்வி கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!