சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்படம் குறித்து வெளியான புதிய அப்டேட், என்ன தெரியுமா?

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக இருந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து இவர் நடித்த தர்பார் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இப்படத்தில் அவருடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் லாக்டவுன் காரணமாக இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் 20 நாள் ஷூட்டிங் மட்டுமே நடிகர் ரஜினிக்கு மிதம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!