டிஜிட்டல் உரிமம் ரூ.55 கோடிக்கு விற்பனை…. ஓடிடி-யில் ரிலீசாகிறதா தலைவி? – கங்கனா விளக்கம்

தலைவி படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.55 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், அப்படத்தின் ரிலீஸ் குறித்து கங்கனா விளக்கம் அளித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமியும், கருணாநிதியாக பிரகாஷ் ராஜும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் தமிழ் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளுக்கான டிஜிட்டல் உரிமத்தை அமேசான் மற்றும் நெட்பிளிக்ஸ் ஆகிய நிறுவனங்களிடம் ரூ.55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக நடிகை கங்கனா ரனாவத் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இருப்பினும் இப்படம் முதலில் தியேட்டரில் தான் ரிலீசாகும் என தெரிவித்துள்ளார். தலைவி அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், அதனை தியேட்டரில் ரிலீஸ் செய்தால் தான் சரியாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!