சுறா படம் தோல்வியடைய இவர்கள் தான் காரணம், நீண்ட வருடம் கழித்து இயக்குனர் பதில்

தளபதி விஜய் திரைப்பயணத்தில் மிகப்பெரும் தோல்வியை சந்தித்த படம் சுறா. இப்படத்தின் தோல்வி விஜய் ரசிகர்கள் தாண்டி அவருக்குமே வருத்தம் தான்.

ஏனெனில் விஜய்க்கு இது 50வது படம், அதனால் பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது, அந்த எதிர்ப்பார்ப்பு எல்லாம் உடைந்தது எல்லாருக்கும் வருத்தம்.

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் சமீபத்தில் சுறா படம் ஏன் தோல்வியடைந்தது என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதில் ‘சுறா முதல் காட்சி வெளிநாட்டில் பார்த்து நன்றாக இருக்கு என்று சொன்னார்கள், ஆனால், இங்கு தான் வெறும் நெகட்டிவ் விமர்சனம் வந்தது.

அது ஏன் என்றே தெரியவில்லை, விஜய்க்கு எதிராக அவர் வளர்ந்து விடக்கூடாது என ஒரு சிலர் செய்த சதி அது’ என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!