பிரபல ஹாலிவுட் நடிகர் சாம் லாய்ட் மரணம்

மூளையில் கட்டி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகர் சாம் லாய்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் சாம் லாய்ட். இவர் ரைசிங் சன், ஸ்கோர்சர், சூப்பர் காபெர்ஸ், பேக் மை மிட் நைட், எக்ஸ் டெர்மினேட்டர்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கோச், ஸ்பின் சிட்டி, டபுள் ரஷ் உள்ளிட்ட பிரபலமான தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்து இருக்கிறார்.

சாம் லாய்ட்டுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாம் லாய்ட் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56. மறைந்த சாம் லாயிட்டுக்கு வனேஸ்ஸா என்ற மனைவியும், வெஸ்டன் என்ற மகனும் உள்ளனர். இவர் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் லாயிடின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் லாய்ட்டின் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர்-நடிகைகள் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!