ரிஷி கபூர் மரணம் – ரஜினி, கமல் இரங்கல்

பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மரணத்திற்கு நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு திரையுலகினரிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பாலிவுட் மட்டுமல்லாது பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல், ரிஷிகபூரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள ரஜினி, “என்னுடைய மிக நெருங்கிய நண்பர் ரிஷி கபூரின் மறைவால் எனது இதயம் உடைந்து விட்டது; அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில், “எப்போதும் புன்னகை தவழும் முகத்துடன் இருக்கும் ரிஷி கபூரின் மறைவு நம்ப முடியாதது. ரிஷி கபூரும் நானும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை வைத்திருந்தோம்; அவரது குடும்பத்திற்கு இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!