வலிமை படக்குழு வெளியிட்ட அறிக்கை! தல அஜித் ரசிகர்களுக்கு வந்த அதிர்ச்சி செய்தி

அஜித் வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார். போனி கபூர் இப்படத்தை தயாரித்து வந்தார். நேர்கொண்ட பார்வை படத்தின் கூட்டணியை தொடர்ந்து மீண்டும் இக்கூட்டணி அமைந்துள்ளது.

இதன் படப்பிடிப்புகள் ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. அண்மையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் முழுவதும் நிறுத்தப்பட்டன.

ஒரு பக்கம் கொரோனா ஊரடங்கு முடிவடையுமா இல்லை நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எல்லோருக்கும் உள்ளது.

அதே வேளையில் ரசிகர்களும் மே 1 ல் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு படம் குறித்த அப்டேட்டுகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் படக்குழு தாங்கள் செய்து வரும் படங்கள் குறித்த அப்டேட்டுகளை கொரோனாவால் வெளியிடப்போவதில்லை என அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஊரடங்கில் அஜித்தின் பிறந்த நாளை கொண்டாடமுடியுமா என குழப்பத்தில் இருக்கும் ரசிகர்களுக்குஇந்த செய்தியும் வருத்தமான விசயம் தான்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!