அப்படி இருந்து இப்படி ஆன தமிழ் நடிகைகள்.. சுவாரசிய பட்டியல்


தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகைகளாக வளம் வந்துகொண்டிருக்கும் சிலர் அவர்களது சினிமா பயணம் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த பிறகு தான் தொடங்கியிருக்கிறது. அந்த பட்டியலை இப்போது பார்க்கலாம்.


திரையுலகில் என்றும் திகட்டாத ஒரு நடிகையாக இருப்பவர் நயன்தாரா இவர் சினிமாவில் வருவதற்கு முன்பு மலையாளம் சேனலில் தொகுப்பாளராக இருந்தவர். அப்படி இருந்த நயன்தாராதான் இன்று சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார்.


அடுத்து ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் பொறாமை படும் அளவிற்கு இருக்கும் நடிகை நஸ்ரியா. அவரும் மலையாள சேனலில் ஒரு ரியாலட்டி ஷோவில் தொகுப்பாளராக இருந்தவர்.


அட்டகத்தி, காக்கா முட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ், இவர் சன் டிவியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தவர்.


த்ரிஷாவும் விஜய் டிவியில் ஆரம்ப காலத்தில் தொகுப்பாளராக இருந்து பிரபலமாகுவதற்கு முன்பே சினிமாவில் கால் பதித்து விட்டார்.


கடைசியா நம்ம விருமாண்டி நடிகை அபிராமி ஏசியா நெட் சேனலில் தொகுப்பாளராக இருந்துதான் சினிமாவில் அறிமுகமாயினார். இவர் தமிழ் உட்பட பல மொழிகளில் நடித்துள்ளார். ஆனால் தற்போது திரும்பவும் தொகுப்பாளராக இருக்கிறார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!