ரீமேக் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ள நடிகர் விஜய் மகன் சஞ்சய், எந்த திரைப்படம் தெரியுமா?

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர், இவரின் நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களும் தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகிறது.

மேலும் இவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் உள்ளார், அவர் தற்போது சினிமா தொடர்பான படிப்பை கனடாவில் படித்து வருகிறார். மேலும் ஜேசன் சஞ்சய் இயக்கிய குறும் படம் ஒன்று சென்ற வருடம் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார் எனும் தகவல் சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.

தெலுங்கில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்து முடித்துள்ள உப்பேனா, திரைப்படத்தில் தன ஜேசன் சஞ்சய் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் ரீமேக் உரிமத்தை வாங்கியுள்ள நடிகர் விஜய் சேதுபதி, இப்படத்தை தயாரிப்பது மட்டுமின்றி. அதில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது.

மாஸ்டர் திரைப்படத்தின் ஷூட்டிங்கின்போது உப்பேனா கதையை நடிகர் விஜய் சேதுபதி விஜய்யிடம் கூறினாராம், இதில் தனது மகன் நடித்தால் சரியாக இருக்கும் என விஜய் கூறியுள்ளார். அதன் பிறகே உப்பேனா திரைப்படத்தின் ரீமேக் உரிமத்தை வாங்கியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.

மேலும் இந்த தகவல் இந்த அளவிற்கு உண்மையென தெரியவில்லை, அதிகாரப்பூர்வமான தகவல் வரும்வரை பொறுத்திருந்து தன பார்க்க வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!