விக்ரமுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த வடிவேலு

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகர் விக்ரமுக்கு வடிவேலு வித்தியாசமான வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சீயான் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விக்ரம். பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

மேலும் தனது வித்தியாசமான நடிப்பால் இவர் ரசிகர்களை எப்போதுமே ஆச்சர்யத்தில் வைத்துள்ளார். இன்று இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதை முன்னிட்டு, அவருக்கு ரசிகர்கள் திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் வடிவேலு தனது ட்விட்டர் பக்கத்தில் அவருக்கு சூப்பரான வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார். ”பிறந்தநாள் வாழ்த்துக்கள் விக்ரம், வாழ்க பல்லாண்டு’ என பதிவிட்டுள்ள அவர், இருவரும் சேர்ந்து நடித்த கிங் படத்தில் இடம்பெற்ற காமெடியை பகிர்ந்துள்ளார்.

இது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!