தனக்கு கொரோனா இருப்பதாக டுவிட் போட்ட இயக்குனரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தனக்கு கொரோனா இருப்பதாக டுவிட் போட்ட இயக்குனர் ராம் கோபால் வர்மாவை நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் படங்களை இயக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் ராம் கோபால் வர்மா. இந்திய திரையுலகிலும், அரசியலிலும் பிரபலமானவர்களைப் பற்றி தனக்கேயுரிய பாணியில் அதிரடியான கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து சர்ச்சைகளில் சிக்குபவர்.

அந்தவகையில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். நேற்று, தனக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் கூறியுள்ளார் என ராம் கோபால் வர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் இந்த டுவிட்டை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அடுத்த பதிவில், எனக்கு கொரோனா தொற்று இல்லை, எனது டாக்டர் என்னிடம் பொய் சொல்லிவிட்டார் என்னை April Fool ஆக்கிவிட்டார், இதில் என்னுடைய தவறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார்”. ராம் கோபால் வர்மாவின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். ரசிகர்கள் பலர் அவரை திட்டித் தீர்த்தனர். அவரை கிண்டலடித்து மீம்ஸ் போட்டனர். பின்னர் ராம் கோபால் வர்மா மன்னிப்பு கேட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!