போதைக்கு அடிமையாகி மீண்டது எப்படி? – கங்கனா ரணாவத் விளக்கம்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத், போதைக்கு அடிமையாகி பின்னர் மீண்டது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகையான கங்கனா ரணாவத், தற்போது ‘தலைவி’ படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடித்து வருகிறார். வீடியோ ஒன்றில் இளமை கால வாழ்க்கையை நினைவு கூர்ந்து அவர் பேசி இருப்பதாவது:- “எனக்கு 15 அல்லது 16 வயது இருக்கும்போது வீட்டைவிட்டு ஓடினேன். நட்சத்திரத்தை பிடித்துவிட முடியும் என்று அப்போது நினைத்தேன். அதன்பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். போதை பழக்கம் ஏற்பட்டது. ஒன்றரை ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை போதைக்கு அடிமையாக இருந்தேன்.

சில வகையான மனிதர்கள் வந்தனர். அவர்களிடம் இருந்து மரணத்தால் மட்டுமே என்னை காப்பாற்ற முடியும் என்ற நிலை இருந்தது. இந்த கஷ்டங்கள் எனது ‘டீன் ஏஜ்’ வாழ்க்கையில் நடந்தன. அதன் பிறகு நல்ல நண்பர் ஒருவர் வந்து யோகாவை சொல்லி கொடுத்தார். ராஜயோகா புத்தகம் ஒன்றையும் வழங்கினார். சுவாமி விவேகானந்தரை குருவாக ஏற்று என்னை வளர்த்துக்கொண்டேன்.

எனது வாழ்க்கையில் அந்த சவாலான நேரங்கள் வராமல் இருந்திருந்தால் கூட்டத்தோடு காணாமல் போய் இருப்பேன். எனக்கு மன உறுதியும், திறமையும் உருவாக ஆன்மிகம் வழிகாட்டியது. மோசமான நேரங்கள்தான் உண்மையில் நல்ல நேரங்கள்”. இவ்வாறு வீடியோவில் பேசி உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!