அஜித்தின் விஸ்வாசம் படம் குறித்து வெளியாகிய வதந்தி..!! இது உண்மைதானா..?


விவேகம் ஹிட்டு என ஒரு தரப்பும், இல்லை இல்லை ப்ளாப்பு என மற்றொரு தரப்பும் இன்னும் சண்டை போட்டுக்கொண்டுதான் இருகிறார்கள். ஆனால், எது எப்படியோ என நேற்று விஸ்வாசம் படத்தின் பூஜையை சத்தமே இல்லாமல் முடித்துள்ளார்கள் படக்குழு என்ற தகவல் பரவியது.

விஸ்வாசம் படத்திற்க்காக சென்ற வாரமே நடிகர் அஜித்குமார் கோயிலில் சிறப்பு பூஜை ஒன்றை செய்தார். அது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வளைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது.


இந்நிலையில், படக்குழு நேற்று வியாழக்கிழமை சாய்பாபா கோயிலில் விஸ்வாசம் படத்திற்கு பூஜை போட்டுள்ளார்கள் என தகவல்கள் வெளியாகின.

என்னப்பா இது மீடியாக்கு கூட சொல்லாமல் திடீரென பூஜையை போட்டுடாய்ங்க என்று விசாரணை வலையை வீசினோம். அப்போது தான் தெரிந்தது விஸ்வாசம் படத்திற்கு பூஜை போடவில்லை. சிறுத்தை சிவா-வின் புதிய அலுவலகத்திற்கு பூஜை போட்டுள்ளார்கள் என்று. விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் கண்டிப்பாக தொடங்கும் என்றும் திபாவளிக்கு படம் வெளியாவது உறுதி என்றும் கூறுகிறது படக்குழு.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!