மாஸ்டர் படம் உருவாக இவர் தான் முக்கிய காரணம், யார் தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதன் முறையாக தளபதி விஜய் மட்டும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பல தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வருகிறது.

சமீபத்தில் அணைத்து ரசிகர்கள் எதிர்பாத்து காத்துகொண்டு இருந்து மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மிக சிறந்த முறையில் நடைபெற்றது.

இதில் பல சுவாரஸ்சிய நிகழ்வுகள் நடந்தது, மேலும் தளபதி விஜய் பல வருடங்கள் கழித்து ஒரு விழாவிற்கு கோட் சூட்டில் செம ஸ்டைலாக வந்திருந்தார்.

அதற்கு நண்பர் அஜித் மாதிரி வரலாம் நினைச்சேன் என்று காரணத்தையும் மேடையிலேயே கூறி அரங்கத்தை அதிர வைத்தார்.

இந்நிலையில் இப்படத்தின் கதையை முதன் முதலில் விஜய்யிடம் இயக்குனர் லோகேஷ் கூறுவதற்கு திரு சதீஷ் என்பவர் தான் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளரான ஜெகதீஷ் மூலமாக கொண்டு செல்ல காரணம் என தெரியவந்துள்ளது.

சதீஷ் என்பவர் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!