ரசிகர்கள் இதை செய்தால் தான் ரஜினி அரசியலுக்கு வருவாராம், செய்வார்களா?

தமிழ் சினிமாவையும் அரசியலையும் என்றுமே பிரிக்க முடியாது. கலைஞர் சினிமாவில் கதை எழுதியவர், எம்.ஜி.ஆர் ஒரு நடிகராக பிரபலமாகி அப்படியே அரசியல் வந்து முதலமைச்சர் ஆனவர்.

அதை தொடர்ந்து ஜெயலலிதா அரசியலில் காலடி எடுத்து வைத்து பல வெற்றிகளை கண்டவர்.

இவரை தொடர்ந்து விஜயகாந்த் களத்தில் இறங்கி எதிர்கட்சி தலைவர் என்ற அந்தஸ்த்து வரை உயர்ந்தவர்.

தற்போது கமல்ஹாசனும் கட்சி தொடர்ங்கிவிட்டார், ஒரு தேர்தலையும் அவர் சந்தித்துவிட்டார்.

இதன் பிறகு ரஜினிகாந்தும் அரசியலில் காலடி எடுத்து வைப்பதாக சில வருடங்களுக்கு முன்பு கூறினார்.

ஆனால், தற்போது மக்களிடமிருந்து பெரும் எழுச்சி எழ வேண்டும், அவை மிகப்பெரிய அளவில் நடக்க வேண்டும், ரசிகர்களும் இதற்கு துணையாக பணியாற்ற வேண்டும்.

அப்படி ஒரு எழுச்சி எழுந்தால், அப்போது நான் வருகின்றேன் என்று இன்றைய பேட்டியில் ஆவேசத்துடன் ரஜினி கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!