இவனுக்கு முடிவு இப்ப இல்ல தொடரும்.. எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான சிம்பு பட டிரைலர்..

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்துள்ள ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. ஏற்கனவே இந்த மூவர் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களில் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.

அந்த வகையில் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் மீதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தில் இருந்து ‘காலத்துக்கும் நீ வேணும்’ என்ற பாடலும், ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

இத்திரைப்படம் செப்டம்பர் 15-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!