ரஜினி, விஜய், அஜித் குறித்து இது தான் என் கருத்து, அதிரடியாக கூறிய முன்னணி நடிகர்

தமிழ் திரையுலகில் தனது சிறந்த நடிப்பினால் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்திருப்பவர்கள் ரஜினி,அஜித் மற்றும் விஜய்.

இவர்கள் மூவரும் தற்போது தனது படங்களின் வேலைகளில் மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர். ஆம் ரஜினி அண்ணாத்த, அஜித் வலிமை மற்றும் விஜய் தனது மாஸ்டர் படத்தின் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவரக்ளை பற்றி பலரும் பல கருத்துக்களை மேடைகளிலோ, சமூக வலைத்தளங்களிலோ அல்லது நேர்காணல்களிலோ தெரிவிப்பது ஒன்றும் புதிதல்ல.

அந்த வகையில் தற்போது பிரபல முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வருபவர் திரு விவேக் அவர்கள்.

இவர் தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் ஓர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதில் விவேக் கூறியது : எனக்குப் பிடித்த 3 முக்கியப் பண்புகள்.

1. யார் பற்றியும் அவதூறு பேசாதே – திரு. ரஜினிகாந்த்.

2.ignore negativity – திரு. விஜய்.

3.வாழு;வாழ விடு – திரு. அஜீத்.

என்று வெளிவப்படையாக டாப் ஹீரோக்களான ரஜினி,விஜய், அஜித்தை பற்றி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!