அஜித்துடன் நான் நடித்த முக்கிய காட்சி கட் செய்து விட்டார்கள், பிரபல நடிகர் வருத்தம்

அஜித் தற்போது வலிமை படப்பிடிப்பில் செம்ம பிஸியாகவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் வெளிநாட்டில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் அஜித் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் என்னை அறிந்தால், இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தை கௌதம் மேனன் இயக்க, த்ரிஷா, அனுஷ்கா, அருண்விஜய், விவேக் என பலரும் நடித்திருந்தனர்.

இதில் அஜித் அருண்விஜய் டீமை பிடிக்க, ரவுடியாக நடித்து ஏமாற்றுவார், அப்போது அஜித் சம்மந்தப்பட்ட காட்சியில் நடிகர் சம்பத்ராம் நடித்து இருந்தாராம்.

ஆனால், அவர் சம்மந்தப்பட்ட காட்சிகள் படத்திலிருந்து நீக்கிவிட்டார்களாம், இதனால், அவருக்கு கொஞ்சம் வருத்தம் இருந்ததாம்.

ஆனாலும், படக்குழு அவர் சம்மந்தப்பட்ட காட்சியை டீசராக வெளியிட்டனர், அதோடு படக்குழுவில் இருந்து அவரிடம் மன்னிப்பு கேட்க, ‘அட இவ்வளவு பெரிய டீம், நம் காட்சியை கட் செய்ததற்கு மன்னிப்பு கேட்கிறார்களே’ என்று நினைத்து சந்தோஷமும் அடைந்தாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!