ஏளனமாக பேசிய நபருக்கு பதிலடி கொடுத்த மாஸ்டர் பட நடிகர்

விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

தற்போது இப்படத்தின் டப்பிங் வேலைகள் போய் கொண்டு இருப்பதாகவும், இதில் முதலில் விஜய் தனது டப்பிங்கை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது. இப்படத்தில் விஜய்யுடன் முதன் முறையாக நடிகர் சாந்தனு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டரில் தனது புகைப்படம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் கமெண்டில் ‘நீங்க எப்போவுமே தோல்வியின் Product தான் என்று ஏளனமாக பேசியுள்ளார்.

இதற்கு நடிகர் சாந்தனு “இப்படி நீங்க நினைக்குறது நாளா தான், நான் என்னுடைய முகத்தை தைரியமா வெளிய காட்றேன், நீங்க உங்க ‘டிபி’ பின்னாடி ஒளிஞ்சு இருக்கீங்க. இன்று நீங்க சந்தோஷமான தூங்குங்க, ஏன்னா negativety பரப்புறத்துல இன்னிக்கி உங்க கோட்டா முடிஞ்சுது” என்று பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!