இந்தியன் 2 பட விபத்து – இயக்குனர் ‌ஷங்கரிடம் போலீஸ் விசாரணை

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக இயக்குனர் ‌ஷங்கரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இயக்குனர் ‌ஷங்கர் இயக்கத்தில் நடித்துவரும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னையை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் நடந்தது. கடந்த 19-ந்தேதி படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து உதவி இயக்குனர் கிருஷ்ணா உள்பட 3 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் இந்த வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. கூடுதல் கமி‌ஷனர் ஈஸ்வர மூர்த்தி விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தார். மேலும் விசாரணைக்கு ஆஜராகும்படி கமல் மற்றும் இயக்குனர் ‌ஷங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதனை ஏற்று ‌ஷங்கர் இன்று வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார்.‌

ஷங்கரிடம் போலீசார் பல்வேறு கேள்விகளை கேட்டு அதனை வாக்குமூலமாக பதிவு செய்தனர். இந்த படப்பிடிப்புக்கு அனுமதி எப்படி பெறப்பட்டது. யாரிடம் வாங்கப்பட்டது. முறையான பாதுகாப்பு வசதி செய்யாதது ஏன்? என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ‌ஷங்கர் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் கமலும் விரைவில் மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆஜர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிற

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!