இவருடன் பணியாற்ற வேண்டும் என்பது கனவு, நான் சிரித்தால் இயக்குனரின் ஆசை

நான் சிரித்தால் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்து செம்ம வசூல் பெற்று வருகின்றது. படத்தின் விமர்சனம் மோசமாக இருந்தாலும், வசூலில் இப்படம் மாஸ் காட்டி வருகின்றது.

அதிலும் ஆதியின் திரைப்பயணத்திலேயே அதிக ஓப்பனிங் பெற்றது இந்த படம் தானாம், இதனால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதியை தொடர்ந்து இப்படத்தின் இயக்குனர் ராணாவிடம் வேறு யாரை இயக்க ஆசை என்று பேட்டியில் கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் நான் சூப்பர் ஸ்டாரின் ரசிகன், அதனால், கண்டிப்பாக அவரை வைத்து இயக்கும் விருப்பம் உள்ளது என கூறியுள்ளார்.

அதோடு ராணா இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர், அதோடு 2.0 படத்தில் பணியாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!