டப்பிங் பேச மறுக்கிறாரா ராஷ்மிகா? – இயக்குனர் விளக்கம்

நடிகை ராஷ்மிகா திரைப்படத்திற்கு டப்பிங் பேச மறுப்பதாக செய்திகள் பரவி வரும் நிலையில், இயக்குனர் நந்தா கிஷோர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்கள் மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற நாயகி ராஷ்மிகா மந்தனா, தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் கார்த்தி உடன் சுல்தான் படத்தில் நடித்தவர், அடுத்ததாக சூர்யாவின் படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தாய் மொழியான கன்னடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் நடிக்க ஒப்புக்கொண்ட படம் தான் ‘பொகரு’.

துருவ் ஷார்ஜா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, டப்பிங் வரைக்கும் வந்துவிட்டது. ஆனால் இந்த படத்திற்கு டப்பிங் பேச ராஷ்மிகா நேரம் ஒதுக்காததால் நீண்ட நாட்களாக இந்த படம் கிடப்பிலேயே கிடக்கிறது. ராஷ்மிகா பிசியான நடிகையாகிவிட்டால் தேதி கொடுக்காமல் இழுத்தடிக்கிறார் என்று தற்போது செய்திகள் பரவ துவங்கியுள்ளன.

ஆனால் படத்தின் இயக்குனர் நந்தா கிஷோர் இதை மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, “ராஷ்மிகா ஏற்கனவே இந்த படத்திற்கான பாதி டப்பிங் பேசிவிட்டார். தற்போது அவர் பிசியான நடிகையாக இருப்பதால் அவருக்கு ஏற்றபடி சென்னையிலோ அல்லது ஐதராபாத்திலோ டப்பிங் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்து தர நாங்கள் தயாராகவே இருக்கிறோம்.

ஆனால் இதுபற்றி அவரிடம் கூறினால், அவரோ “ஏன் சார்.. நான் என்ன தவறு செய்தேன். என் சொந்த ஊரிலேயே வந்து நான் டப்பிங் பேசி தருகிறேன் என்று சொல்வது தவறா” என்று கூறி சென்னை மற்றும் ஐதராபாத்தில் டப்பிங் பேச விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார். அதனால் அவர் பெங்களூர் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!