பெரிய ஹீரோவுடன் கமிட்டான அருண்ராஜா காமராஜ், மேடையில் கூறிய சிவகார்த்திகேயன்.. விஜய்யாக இருக்குமா?

சிவர்த்திகேயன் தயாரிப்பில் கனா படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ்.

இவரும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களும் நீண்ட கால நண்பர்கள் என்று நாம் அறிவோம்.

இந்நிலையில் அண்மையில் விருது விழாவில் கலந்து கொண்ட சிவா, பேசிய போது “இயக்குனர் அருண்ராஜா காமராஜ் தற்போது பெரிய ஹீரோ ஒருவருடன் கமிட்டாகியுள்ளார். அதை நான் இந்த மேடையில் கூற கூடாது. அதற்கான முறையான அறிவிப்பு கூடிய விரைவில் வந்தடையும்” என்று கூறினார் .

மேலும் தளபதி 65 படத்திற்காக விஜய் அவர்களிடம் அருண்ராஜா காமராஜ் கதை கூறியுள்ளதாக தகவல்கள் கசிந்தது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!