தளபதி ரசிகர்களுக்கு கிருஸ்துமஸ் பரிசு..!! என்ன தெரியுமா..?


ஒருவழியாக அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த தளபதி62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுவிட்டது படத்தை தயாரிக்கவுள்ள சன் பிக்சர்ஸ்.

படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு கிட்டத்தட்ட முடிவாகிவிட்டது. நடிகை ரகுல் பரீத் சிங் படத்தின் நாயகியாக நடிக்கவுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிருஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், ரசிகர்களுக்கு கிருஸ்துமஸ் விருந்தாக தளபதி62 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் அல்லது தலைப்பை அறிவித்துவிடலாம் என நடிகர் விஜய் கூறியுள்ளாராம். படப்பிடிப்பு தொடங்கும் முன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்படி என யோசிக்கிறாராம் இயக்குனர் முருகதாஸ்.


அதே நேரம், படத்தின் தலைப்பை வெளியிடுவதில் எந்த பிரச்னையும் இல்லை என உறுதியளித்துள்ளாராம் முருகதாஸ். சிவா- அஜித் கூட்டணிக்கு இருக்கும் “V”-“M” சென்டிமென்ட் போலவே, விஜய்-முருகதாசிற்கும் ஒரு சென்டிமென்ட் உள்ளது. அவர்கள் இணைந்த முந்தைய இரண்டு படங்களின் தலைப்பும் துப்பாக்கி, கத்தி என ஆயுதங்களின் பெயராகவே இருந்தது.

இந்நிலையில், தளபதி62 -வின் தலைப்பும் ஏதாவது ஒரு ஆயுதத்தின் பெயராகத்தான் தான் இருக்கும் என ரசிகர்கள் கணித்துள்ளார்கள். ஆக, கிருஸ்துமஸ் தினத்தன்று தளபதி தன்னுடைய ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு ஆயுதத்தை தலைப்பாக கொடுக்கப்போகிறார் என்பது உறுதியாகியுள்ளது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!