அமைதியாகவே சோதனைகளை சாதனையாக்கிய விஜய்- இதற்கு முன் இப்படியெல்லாம் பிரச்சனைகளை சந்தித்துள்ளாரா?

விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடும் ஒரு மிகப்பெரிய நடிகர். எப்போதும் தனது ரசிகர்களுக்கு மதிப்பு கொடுப்பதும், அவர்களுக்கு உதவுவதும் என நெருக்கமாகவே இருப்பார்.

ஆண்டுக்கு ஆண்டு அவர்களை சந்திப்பது என இருப்பார். அண்மையில் வருமான வரி சோதனை அவர் வீட்டில் நடந்தது, இதனால் ரசிகர்கள் பதற்றம் அடைய பின் சுமூகமாகவே முடிந்தது.

இதுபோல் பலமுறை விஜய் தன் பட ரிலீஸ் நேரத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்துள்ளார். எப்போது என்ற விவரங்கள் இதோ,

துப்பாக்கி 2012
ஃபஸ்ட் லுக் போஸ்டர் விஜய் புகை பிடிப்பது போல் இருந்ததற்கு பிரச்சனை, முஸ்லீம்களை தவறாக படத்தில் சித்தரித்துள்ளார்கள் என பட ரிலீஸ் முன்பே சர்ச்சைகள் எழுந்தன.

ஆனால் அமைதியாக இந்த சர்ச்சைகளை முடிய துப்பாக்கி படம் பிளாக் பஸ்டர் ஆனது.

தலைவா 2013
தலைப்பே கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் ஆளும் கட்சியே படத்தை முடக்க பல முயற்சிகள் எடுக்க தமிழ்நாடு தவிர மற்ற இடங்களில் படம் ரிலீஸ் ஆனது. பின் விஜய் அரசிடம் பேச்சு வார்த்தை நடத்த சொன்ன தேதியில் இருந்து ஒரு வாரம் கழித்தே படம் ரிலீஸ் ஆனது. இதனால் பாக்ஸ் ஆபிஸில் பின்னடைவை சந்தித்தது.

புலி 2015
விஜய்யின் மேனேஜரும் இப்பட ஒரு தயாரிப்பாளர். சரியாக பட ரிலீஸுக்கு முந்தைய நாள் விஜய் மற்றும் பட தயாரிப்பாளர் வீடுகளில் வருமான வரி சோதனை நடந்தது. சோதனை நடந்து முடிந்த பிறகே படம் ரிலீஸ் செய்ய அனுமதித்ததால் அதிகாலை ஷோக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.

மதியத்தில் இருந்து படம் ரிலீஸ் ஆனது.

மெர்சல் 2017
படத்தில் மருத்துவம் சம்பந்தப்பட்ட ஒரு வசனம், அதுவும் விஜய் பேசியது. அது ஆளும் மத்திய கட்சியினரால் சர்ச்சையாக பார்க்கப்பட பெரிய பிரச்சனை ஆனது.

இதையும் அமைதியாக கையாண்டு சாதனை படைத்தார் விஜய்.

சர்கார் 2018
விஜய் புகைப்பது போல் ஒரு ஃபஸ்ட் லுக், அடுத்து படத்தில் வரலட்சுமி பேசிய சில வசனங்கள் பிரச்சனையாக பார்க்கப்பட்டது.

பின் முதல்வரை விஜய் சந்தித்து பட ரிலீஸிற்கு உதவினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!