அஜித்தின் வலிமை பட வியாபாரத்திற்கு இப்படி ஒரு போட்டியா?- டைட்டில் வந்ததற்கே இப்படியா!

தீரன் பட வினோத் இயக்கத்தில் அஜித் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார். போலீஸ் அதிகாரியாக தல இதில் நடிக்கிறார், மற்றபடி படம் குறித்து எந்த ஒரு தெளிவான தகவலும் இல்லை.

ரசிகர்களும் ஏதாவது ஒரு அப்டேட் வருமா என்று தான் ஏக்கமாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இதுவரை படத்தின் டைட்டில் மட்டும் தான் வெளிவந்துள்ளது, அதற்குள் பட வியாபாரம் சூடு பிடித்துள்ளது. அதாவது இதற்குள்ளே வலிமை படத்தை 50% அட்வான்ஸ் பணம் கொடுத்து படத்தை வாங்க 3 விநியோகஸ்தர்கள் கடும் போட்டி போடுகிறார்களாம்.

தகவல் அறிந்தவர்கள் பட டைட்டில்மட்டும் தான் வந்துள்ளது, இதற்குள்ளே இப்படியா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!