தர்ஷன் மீது போலீசாரிடம் புகார் அளித்த சனம் ஷெட்டி, இது தான் காரணமா?

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாக அறிமுகனாவர் தர்ஷன்.

இவர் பிக் பாஸில் இருக்கும் போழுது நடிகை ஷெரினுடன் நல்ல நட்பை வைத்திருந்தார். ஆனால் அங்கிருந்த சில போட்டியாளர்கள் அது நடப்பு அல்ல காதல் என்று கூறி வந்தனர்.

ஆனால் அதனை மறுத்த தர்ஷன் எனக்கு வெளியில் ஒரு காதலி இருப்பதாக கூறியிருந்தார்.

மேலும் இதனை குறித்து தர்ஷனுடன் மாடலிங்கில் பணிபுரிந்து வரும் சனம் ஷெட்டி தான் அந்த காதலி என்று சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வந்தது.

அந்த விஷயத்தை உறுதி செய்யும் விதமாக சனம் ஷெட்டி ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு நான் இனிமேல் தர்ஷன் வாழ்வில் கிடையாது என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தர்ஷன் தன்னை திருமணம் செய்ய மறுத்ததாக கூறி சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளாராம் சனம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!