‘கேஜிஎப்’ பின்னணி கதையில் தனுஷ்

யாஷ் நடிக்க கன்னடத்தில் கோலார் தங்க வயல் பின்னணியில் ‘கேஜிஎப்’ என்ற படம் ஏற்கனவே வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் இந்த படம் வெளியானது. இதுபோல் கேஜிஎப் இரண்டாம் பாகமும் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது.

விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் தங்கலான் படமும் கேஜிஎப் பின்னணி கதை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழில் வெற்றி மாறன் இயக்கத்தில் இன்னொரு கேஜிப் படம் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு நடிகர் என்.டி.ஆரையும் இதில் நடிக்க வைக்க பேசி வருகிறார்கள். ஏற்கனவே தனுஷ், வெற்றி மாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன. மீண்டும் இருவரும் கேஜிஎப் கதையம்சம் உள்ள படத்தில் இணைய இருப்பதால் இந்த படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.