தமிழ் சினிமாவில் மரியாதையே இல்லை, பேட்ட, தர்பார் பிரபலம் ஆதங்கம்

ரஜினி நடிப்பில் பேட்ட, தர்பார் படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதற்கு முக்கிய காரணம் ரஜினியின் இளமை தோற்றம் தான்.

90களில் பார்த்த ரஜினியை அப்படியே கண்முன் கொண்டு வந்தனர், அதிலும் தர்பாரில் செம்ம இளமையாக இருந்தார்.

இந்நிலையில் தர்பார், பேட்ட படத்தில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியவர் நிஹாரிகா, இவர் இந்த இரண்டு தமிழ் படங்களில் மட்டும் தான் பணியாற்றியுள்ளார்.

ஆனால், பாலிவுட்டில் கொடிக்கட்டி பறக்கும் காஸ்டியூம் டிசைனர், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘ரஜினி சார், முருகதாஸ் சார் இரண்டு பேருடன் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

என்னை பெரிதும் மதித்தார்கள், ஆனால், தயாரிப்பு நிறுவனம் எனக்கான மரியாதை தரவில்லை, இன்னும் சொல்ல வேண்டுமென்றால், தமிழ் திரையுலகில் டிசைனருக்கே மரியாதை இல்லை’ என கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!