கைதி கதை உருவான விதம் இதை பார்த்து தான்.. முதன் முறையாக கூறிய லோகேஷ்

சென்ற வருடம் பிகில் படத்துடன் வெளிவந்து மிக பெரிய வெற்றியடைந்த படம் தான் கைதி. இப்படத்தை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார்.

இப்படத்தின் கதையை ஒரு paper கட்டிங்கில் இருந்து தான், நாங்கள் விரிவு செய்தோம் என்று படம் வெளிவருவதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் சில பேட்டிகளில் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது படத்தின் ரிலீஸ்க்கு பிறகு தான் கலந்து கொண்ட பேட்டியில் பேசிய பொது ” ஒரு நாள் உணவு உண்ணும் நேரத்தில் என்னுடைய துணை இயக்குனர்கள் paper-ல் இருந்து சிறிய கட்டிங் ஒன்றை காமித்தார்கள். அதில் ஒரு காவல் துறை அதிகாரியின் மகளுக்கு பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள இந்த அதிகாரி இங்கு இருப்பார் என்று இந்த அதிகாரியும் தவறாக புரிந்து கொண்டு அணைத்து அதிகாரிகளும் விழாவிற்கு சென்று விட்டார்களாம்.

அப்போது காவல் நிலையத்தில் இருந்து Druken Drive கேஸில் மாட்டிக்கொண்ட நான்கு நபர்கள் காவல் நிலையத்தில் கைதிகளை வெளியேற்றி விட்டு அங்கு இருக்கும் ‘வாக்கி டாக்கி’ போன்ற சில பொருட்களை திருடி விட்டு சென்றதாக” அந்த paper கட்டிங்கில் பதிவிட்டிருந்தது.

மேலும் இதில் இருந்து தான் கைதி கதை துவங்கியது என்று முதன் முறையாக கூறியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!