வலிமை படப்பிடிப்பில் செல்போன் பயன்படுத்த தடை

வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பில் துணை நடிகர்-நடிகைகள், பெப்சி தொழிலாளர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்கத்தில் ‘வலிமை’ படத்தில் அஜித் நடித்து வருகிறார். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் நடந்து வருகிறது. தற்போது அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அஜித்துக்கும் வில்லன்களுக்கும் நடக்கும் மோதல் காட்சிகளை வெளிநாட்டு ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து படமாக்குகின்றனர்.

இந்த படத்தில் அஜித்குமார் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிப்பதை போனிகபூர் ஏற்கனவே உறுதிப்படுத்தி உள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பது யார் என்பதை படக்குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை. இலியானா, யாமிகவுதம், ரகுல்பிரீத் சிங் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. அஜித் தோற்றம் மற்றும் படக்காட்சிகள் வெளியாவதை தடுக்க துணை நடிகர்-நடிகைகளும், பெப்சி தொழிலாளர்களும் படப்பிடிப்பு அரங்குக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!