விஜய் சேதுபதி நிம்மதியை கெடுப்பதுக்குன்னே கெளம்பி வந்த நடிகர்

விஜய் சேதுபதிக்கு பிரச்சனை செய்வதே தன் வேலை என்கிறார் ரகு ஆதித்யா.

ரகு
ர்மதுரை, பரியேறும் பெருமாள், சீமராஜா உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்த ரகு ஆதித்யா தற்போது விஜய் சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் வில்லனாக நடிக்கிறார். வெங்கட கிருஷ்ண ரோகந்த் இயக்கி வரும் படத்தில் விஜய் சேதுபதியை பகைத்துக் கொள்வது குறித்து ரகு டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு பேட்டி அளித்துள்ளார்.

நடிப்பு, தயாரிப்பு
பேட்டியில் ரகு கூறியிருப்பதாவது, நான் ஹரியின் பூஜை படம் மூலம் நடிகர் ஆனேன். ஆனால் நான் விஜய் சேதுபதியின் தம்பியாக நடித்த தர்மதுரை படம் தான் எனக்கு திருப்புமுனையாக இருந்தது. தேவராட்டம் படம் மூலம் மக்கள் மத்தியில் அங்கீகாரம் கிடைத்தது. யாதும் ஊரே யாவரும் கேளிர் மூலம் நிச்சயம் நான் பிரபலமானவனாக ஆவேன். இந்த படத்தில் நடிப்பதுடன் நான் தயாரிப்பு வேலைகளையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

விஜய் சேதுபதியின் வில்லன்
யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நான் வில்லனாக நடிக்கிறேன். இயக்குநர் மகிழ் திருமேனி தான் முக்கிய வில்லன். அவரும், நானும் ஹீரோவுக்கு பிரச்சனை செய்வோம். அவர் வில்லன் நம்பர் ஒன் என்றால், நான் நம்பர் 2. படத்தில் 12 முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளன. நான் படம் முழுக்க வருவேன். தினமும் செட்டில் விஜய் சேதுபதியிடம் இருந்து ஏதாவது கற்றுக் கொண்டிருக்கிறேன்.

ஹீரோ ரகு
மகிழ் திருமேனி செட்டுக்கு வரும்போது தான் இயக்குநர் என்பதை மறந்துவிட்டு நடிகராக மட்டுமே வருகிறார். அவரின் குரல் தான் மொரட்டுத்தனமாக இருக்குமே தவிர அவர் மிகவும் இனிமையானவர். என் நண்பர் எழில் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்றார் ரகு. முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் தம்பி தான் இந்த ரகு என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!