ஒரு பொண்டாட்டி, 3 காதலிகள்: வாழ்றார்யா விஜய்

விஜய் தேவரகொண்டா தினமும் ஒரு காதலியின் புகைப்படத்தை வெளியிடுவதை பார்த்து சிங்கிள்ஸ் எல்லாம் அவரை சபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர்
கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள தெலுங்கு படம் வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர். அந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ராஷி கன்னா, கேத்ரீன் தெரசா, இசபெல் லெய்ட் என்று நான்கு ஹீரோயின்கள். அனைவருமே விஜய்யின் காதலிகள். தினமும் ஒரு நடிகையுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மொரட்டு சிங்கிள்ஸின் சாபத்திற்கு ஆளாகியுள்ளார் விஜய்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் படத்தில் விஜய் தேவரகொண்டாவின் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். அவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ, இப்படியே காய்கறியை நறுக்கினால் விரலை தான் நறுக்கிக் கொள்வீர்கள் என்று கிண்டல் செய்துள்ளனர். சமையல் அறையிலும் இந்த விஜய் ரொமான்ஸ் பண்ணுகிறாரே என்று விமர்சித்துள்ளனர்.

90ஸ் கிட்ஸ்
90ஸ் கிட்ஸோ(நீங்கள் எல்லாம் கிட்ஸாப்பா?) அடப் பாவி விஜய், எங்களுக்கு கல்யாணம் பண்ண ஒரு பொண்ணு கிடைக்க மாட்டேங்குது, உங்களுக்கு நான்கு பேரா, வாழ்க்கை தான்யா என்று ஃபீல் பண்ணியுள்ளனர். வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் காதலர் தின ஸ்பெஷலாக வரும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிண்டல்
விஜய் தேவரகொண்டாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வாழ்த்தியுள்ளனர். ஆனால் தமிழ் ரசிகர்களோ ஐஸ்வர்யாவை கிண்டல் செய்துள்ளனர். இந்த படத்தில் நீங்களா, அதுவும் தேவரகொண்டாவுக்கு மனைவியா என்று நக்கலாக கேட்டுள்ளனர். சிலரோ, விஜய் இந்த படத்திலாவது காதல் என்று காமத்தை காட்டாமல் இருந்தால் சரி என்று தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!