மகிழ்ச்சியில் பிக்பாஸ் சேரன்! அடுத்தடுத்து தேடி வந்த இனிப்பான செய்தி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 மூலம் மக்கள் மனங்களை வென்றவர் இயக்குனர் சேரன். அவருக்கென ஒரு தனி ஆர்மியே உருவாகிவிட்டது.

வாய்ப்புகள் இல்லை. வாழ்க்கையை ஓட்ட வேண்டும், புதிய அனுபவம் என்ற காரணங்களால் பிக்பாஸ்க்கு வந்த அவரின் மன நம்பிக்கையை பலரும் பாராட்டினார்கள்.

குடும்பப்பாங்கான, சமூக விழிப்புணர்வு சார்ந்த பல கதைகளை படமாக எடுத்து விருது வாங்கிய சிறப்பு அவருக்கு தான் சாரும். அப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த இதே தேதியில் தான் சேரனுக்கும் பிறந்தநாள். பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

சேரன் அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!