நிவின் பாலி படத்தில் இருந்து திடீரென வெளியேறிய ஹீரோயின்..!!


‘36’ வயதினிலே படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கிவரும் மலையாளப் படம் ‘காயம்குளம் கொச்சுண்ணி’. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மனிதரின் கதை இது.

நெடுஞ்சாலைகளில் செல்பவர்களிடம் வழிப்பறி செய்து, இல்லாத மக்களுக்கு கொடுப்பதுதான் அவர் வேலை.

இந்த உண்மைக் கதையில், ஹீரோவாக நடிக்கிறார் நிவின் பாலி. ஹீரோயினாக அமலா பால் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

ஆனால், வேறு சில படங்களில் அமலா பால் பிஸியாக இருப்பதால், இந்தப் படத்தில் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, படத்தில் இருந்து அமலா பால் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக பிரியா ஆனந்த் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!