கமல் சொன்னதை ரஜினி ரொம்ப சீரியஸா எடுத்துக்கிட்டாரோ?

ரஜினி பற்றி வெளியாகியுள்ள தகவலை பார்த்தவர்கள் நண்பர் கமல் ஹாஸன் கூறியதை சீரியஸாக எடுத்துக் கொண்டு செயல்படுகிறார் போன்று என்று தெரிவித்துள்ளனர்.

தர்பார் ரிலீஸ்
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தர்பார் படம் பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸாக உள்ளது. இதையடுத்து ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார். அதன் பிறகு லோகேஷ் கனராஜுடன் சேர்ந்து படம் பண்ணுகிறாராம். அந்த படத்தில் ரஜினியுடன் சேர்ந்து கமலும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினி மீண்டும் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் முருகதாஸ்
தர்பார் படத்தில் வேலை செய்தபோதே முருகதாஸ் ரஜினியிடம் ஒரு கதை சொல்ல அது அவருக்கு மிகவும் பிடித்துவிட்டது. கண்டிப்பா நாம படம் பண்றோம் என்று ரஜினி முருகதாஸிடம் தெரிவித்துள்ளார். ஆனால் தர்பார் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்தே அடுத்த பட வேலை துவங்கும். அதனால் ரஜினி, முருகதாஸ் மீண்டும் சேர்ந்து படம் பண்ணுவது குறித்து தற்போது எதுவும் உறுதியாக சொல்ல முடியாது என்று அந்த இருவருக்கும் நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

கமல் பேச்சு
அது சரி ரஜினி, முருகதாஸ் மீண்டும் படம் பண்ணுவதற்கும், கமல் சொன்னதற்கும் என்ன தொடர்பு?. கமல் அப்படி என்ன சொன்னார் என்று நீங்கள் கேட்கலாம். மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வருவதால் சோறு போடும் தொழிலான சினிமாவை விட வேண்டும் என்று இல்லை என கமல் முன்பு தெரிவித்திருந்தார். அதை தான் ரஜினி சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளார். கட்சி துவங்கும் பணி இருக்கும் நிலையிலும் அவர் தொடர்ந்து புதுப் படங்களில் கமிட்டாகி வருகிறார்.

வருவார் ரஜினி
நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை வீண் போகாது என்று ரஜினி தர்பார் இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தது ரசிகர்களுக்கு தெம்பு அளித்திருக்கிறது. அரசியலுக்கு வருகிறேன் என்று அவர் சொல்ல வேண்டும் என்று இல்லை. வர வேண்டிய நேரத்தில் வருவார், முதல்வர் ஆவார் என்கிறார்கள் ரஜினியின் தீவிர ரசிகர்கள். கஷ்டப்பட்டு சூப்பர் ஸ்டார் ஆனவர் ரஜினி. அதனால் சோறு போட்டு அங்கீகாரம் அளித்த நடிப்பு தொழிலை அவர் விட வேண்டும் என்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!