டெல்லியைத் தொடர்ந்து கர்நாடகாவிற்கு செல்லும் தளபதி 64 படக்குழு!

விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு டெல்லியைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலம் ஷிமோகாவில் நடக்க இருக்கிறது.

தளபதி 64 அப்டேட்
விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் டெல்லி படப்பிடிப்பு முடிவடைய இருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த நிலையில், வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரையில் கர்நாடகா மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் நடக்க இருக்கிறது. அதற்காக படக்குழுவினர் முன் அனுமதியும் பெற்றுள்ளனர்.

டிசம்பர் 6 திருமண நிச்சயதார்த்தம்
வரும் டிசம்பர் 6 ஆம் தேதி விஜய்யின் மாமா மகளான சினேகா பிரிட்டோவிற்குவும், அதர்வாவின் சகோதரர் ஆகாஷிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறது. இதில், விஜய் 5 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை அதாவது 3 நாட்கள் கலந்து கொள்ள இருப்பதாக கூற்பபட்டது. ஆதலால், கர்நாடகாவில் நடக்க இருக்கும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பில் விஜய் கலந்து கொள்ளமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலேஜ் வாத்தியார்
கமல் ஹாசன் நடிப்பில் வந்த நம்மவர் படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாக்கப்பட்டு வருவதாவும், அதற்கான ரீமேக் உரிமையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கையெழுத்திட்டதாகவும் கூறப்படுகிறது. நம்மவர் படத்தில் கமல் ஹாசன் கல்லூரி பேராசிரியராக நடித்ததைப் போன்று தளபதி 64 படத்திலும் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார். கல்லூரியில் நடக்கும் கல்விமுறை ஊழலுக்கு எதிராக விஜய் குரல் கொடுப்பது போன்று இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டு வருகிறது.

வரும் 2020 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு அன்று தளபதி 64 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருக்கிறது. இதையடுத்து, ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி தளபதி 64 படம் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கைதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், ஸ்ரீமன், சஞ்சீவ், ரம்யா சுப்பிரமணியன், ஸ்ரீநாத், கௌரி கிஷான், ஆண்ட்ரியா, சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். விஜய்யின் மாமா சேவியர் பிரிட்டோ இப்படத்தை தயாரிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!