டிவி, ரேடியோனு எங்க பாத்தாலும் நம்ம நியூஸ்தான்: அலட்டிக்கொள்ளும் கேஜிஆர் ஸ்டூடியோஸ்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்று. இந்த நிலையில், இப்படம் அறிவித்தபடி வெளியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடையும் விதித்துள்ளது.

கடந்தாண்டு டி.ஆர்.எஸ். பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து படத்தை தயாரித்த ஆர்.டி.ராஜா 10 கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளார். தற்போது வரை வட்டியையும், அசலையும் அவர் செலுத்தவில்லை. அதோடு, தான் தயாரித்த ஹீரோ படத்தை கேஜிஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்திடம் கைமாத்தி விட்டுள்ளார்.

இதன் விளைவாக, ஆர்.டி.ராஜாவுக்கு கடன் கொடுத்த டிஆர் எஸ் பிலிம்ஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் மூலம், ஹீரோ உள்பட ஆர்டிராஜாவின் 24 ஏ.எம்.நிறுவனம் தயாரிக்கும் படங்களுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்று டிஆர்.எஸ் பிலிம்ஸ் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

இந்த கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஹீரோ படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவைத் தொடர்ந்து, கேஜிஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம், தங்களது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: டிவி, ரேடியோ, நியூஸ் என்று எங்க திரும்புனாலும் நம்ம நியூஸ்தான். இலவசமாக படத்திற்கு புரோமோஷன் செய்ததற்கு நன்றி. நமக்கு பேன்ஸ் எல்லா பக்கமும் இருக்காங்க போல. கவலைப்படாதீர்கள். படம் கன்பார்மா வரும் டிசம்பர் 20 ஆம் தேதி வருது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், திட்டமிட்டப்படி வரும் டிசம்பர் 20 ஆம் தேதி ஹீரோ படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் குடும்பக் கதையை மையப்படுத்தி வந்த நம்ம வீட்டுப்பிள்ளை வசூல் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!