குரோர்பதி நிகழ்ச்சியில் சிவாஜிக்கு அவமரியாதை – மன்னிப்பு கேட்டார் பிரபல பாலிவுட் நடிகர்

குரோர்பதி நிகழ்ச்சியில் சிவாஜிக்கு அவமரியாதை ஏற்பட்டதற்கு பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் கோன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சியில் முகலாய பேரரசர் அவுரங்கசீப்பின் சமகாலத்தைச் சேர்ந்தவர் யார் என கேள்வி கேட்கப்பட்டது.

கேள்விக்கு வழங்கப்பட்ட விடைகளில் மராட்டிய மன்ன ரான சத்ரபதி சிவாஜியின் பெயர், அடைமொழி ஏதும் வழங்கப்படாமல் “சிவாஜி” என வெறுமனே குறிப்பிடப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. நிகழ்ச்சியை புறக்கணிக்கவேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்துவந்தனர்.

இந்தநிலையில் அமிதாப் பச்சன் மற்றும் நிகழ்ச்சி தயாரிப்பாளர் சித்தார்த்தா பாசு ஆகியோர் தவறுக்காக மன்னிப்பு கோரியுள்ளனர். கவனக்குறைவால் தவறு நிகழ்ந்துவிட்டதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சன் தற்போது உடல் நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மருத்துவ மனையில் இருந்த சமயத்தில் பல நிகழ்ச்சிகளை ரத்து செய்தார். தற்போது மருத்துவர்கள் தொடர்ந்து ஓய்வு எடுக்கும்படி கூறி உள்ளனர். அதனால் அவர் படுத்த படுக்கையாக உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!