கவின் போன்றே கமுக்கமா ஒரு காரியம் செய்த லோஸ்லியா: ரகசியத்தை போட்டுடைத்த தோழி

லோஸ்லியா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் எழுந்தது. அவர்கள் எதை நினைத்தார்களோ அது நடந்துவிட்டது.

லோஸ்லியாவின் ரகசியம்
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமான இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லோஸ்லியாவுக்கு தமிழகத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்துள்ளனர். லோஸ்லியா சென்னையில் தங்கி தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் லோஸ்லியா கண்ணில் அந்த அன்புக் கோரிக்கைகள் படமால் இல்லை. இந்நிலையில் தான் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த விஷயம் சத்தமில்லாமல் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. லோஸ்லியா ரகசியமாக வைத்துள்ள விஷயத்தை அவரின் தோழி போட்டுடைத்துவிட்டார்.

படத்தில் நடிக்கும் லோஸ்லியா
லோஸ்லியாவின் தோழியான தர்ஷி அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு முட்டை குஞ்சில் இருந்து ஸ்டார் என்று போஸ்ட் போட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள், தர்ஷி அக்கா லோஸ்லியா படத்தில் நடிக்கிறாரா, அதைத் தான் இப்படி சொல்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு தர்ஷியோ ஆமாம் என்று பதில் அளித்துள்ளார். பட வாய்ப்பு கிடைத்துள்ளதால் தான் லோஸ்லியா சென்னைக்கு வந்திருக்கிறாரோ, இதை எங்களிடம் சொன்னால் கொண்டாடியிருப்போமே, நல்ல விஷயத்தை போய் இப்படி மறைக்கிறாரே என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கவின் மாதிரியே நடக்கும் லோஸ்லியா
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த கவினுக்கு பட வாய்ப்பு கிடைத்து ஷூட்டிங்கிற்காக வெளிநாட்டிற்கு சென்றார். அவர் படத்தில் பிசியான விஷயமே சாண்டி மாஸ்டர் சொல்லித் தான் அனைவருக்கும் தெரிய வந்தது. தற்போது லோஸ்லியாவும் கவின் போன்றே நடந்து கொண்டுள்ளார். ஆனால் லோஸ்லியாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்துள்ளதா இல்லை ஹீரோயினின் தோழியா என்பது தெரியவில்லை. இந்நிலையில் லோஸ்லியா ஜிம்மில் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!