காமெடி நடிகரை பழிவாங்க காத்திருக்கும் இளம் ஹீரோக்கள்..!! யாருனு தெரியுமா..?


சின்னத்திரையில் நடித்துக்கொண்டிருக்கும் போதே தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிகொண்டவர் அந்த சந்தன நடிகர். வம்பு நடிகரின் துணையோடு வெள்ளித்திரைக்குள் நுழைந்தார். இவர் நடித்தால் அந்த படத்திற்கு மினிமம் கியாரண்டி கிடைத்துவிடும் என முன்னணி ஹீரோக்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என போட்டி போட்டு கொண்டு அவரது கால் சீட்டை வாங்கி குவித்தார்கள். எதிர்பார்த்தது போலவே சந்தன நடிகரின் நகைச்சுவைக்காகவே பல படங்கள் நல்ல வசூலை கொடுத்தன.

ஆனால், நானும் எத்தனை நாளைக்குத்தான் காமெடியனாவே நடிக்கிறது. நானும் ஹீரோயின்களுடன் டூயட் பாடனும் என்று ஹீரோ அவதாரம் எடுத்தார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் சுமார் ரகம் என்றாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நஷ்டமடையவில்லை. இதனால், உற்சாகமாக ஹீரோ பாதையிலேயே சென்று கொண்டிருக்கிறார் சந்தன நடிகர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

ஆனால், இவர் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்பதால் காமெடியன் ரோல்கள் வந்தாலும் ஒப்புக்கொள்வதில்லை. அவ்வளவு ஏன் தளபதி நடிகரின் மெர்சலான படத்திலும், தல நடிகரின் விவேகமான படத்திலும் நடிக்க அழைத்தும் காமெடியன் ரோல் பண்ண மாட்டேன் என்று கூறிவிட்டார்.

இவர் துணையில்லாமல் சில இளம் நடிகர்களின் படம் எடுபடாமலேயே உள்ளன. எப்படியாவது சந்தன நடிகரை மீண்டும் காமெடி ட்ராக்கிற்கு கொண்டு வந்துவிட வேண்டும் என சைக்கிள் ஹீரோவும், அரசியல் வாரிசு ஹீரோவும் மறைமுகமாக அவருக்கு குடைச்சல் கொடுத்து வருவதாக பேசிக்கொள்கிறார்கள் கோடம்பாக்கத்தினர். ஆனால், யார் குடைச்சல் குடுக்குறாங்க என்றெல்லாம் எனக்கு முக்கியமில்லை. என்ன பிரச்சனை வந்தாலும் நான் பாத்துகிறேன் என்று சக்க போடு போடுகின்றார் சந்தன நடிகர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!