பாகுபலி பட வாய்ப்பை மறுத்த பிரபலங்கள் யார் யார் தெரியுமா..?


பாகுபலி படம் வெளிவந்த உடன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்தியா முழுவதும் தென் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்த படம். இந்த படத்தை ராஜமௌலி இயக்கினார். இப்படத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, சுதீப், நாசர் மற்றும் பலர் நடித்தனர். படம் வெளி வந்ததும் அவர்கள் நிஜப்பெயர் மறந்து போகும் அளவிற்கு நிலைமை மாறியது.

பாகுபலி-2

இந்நிலையில் இந்த வருடம் இப்படத்தின் இரண்டாம் பாகம் ரிலீஸ் ஆனது. பாகுபலி-2 படத்தின் வசூல் இந்தியாவில் மட்டும் ரூ 1000 கோடி தாண்டியது. இப்படியிருக்க 2017 வருடத்தில் உலக அளவில் எந்த படம் மிகப்பெரிய வசூல் சேர்த்துள்ளது என்ற பட்டியல் வெளியில் வந்துள்ளது. இதில் பாகுபலி-2 படம் 49வது இடத்தில் இருக்கிறது.

இவ்வாறு அசத்தி இருக்கும் இப் படத்தில் சில கதாப்பாத்திரங்களுக்கு ராஜமௌலி முதலில் அப்ப்ரோச் செய்தது யார் என்று பார்ப்போம்…

பாகுபலி

இயக்குனர் படத்தை முதலில் ஹிந்தியில் எடுத்து விட்டு பின்னர் மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்யும் எண்ணத்தில் இருந்தாராம். ராஜமௌலி பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஹ்ரித்திக் ரோஷனிடம் இடம் பாகுபலி பற்றி பேசினாராம்.
Prabhas- Hrithik Roshan : BAHUBALI


அவர் ஏதும் ஆர்வம் காட்டாததால், பின்னர் பிரபாஸ் இடம் சொல்லி ஓகே வாங்கினாராம் இயக்குனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

சிவகாமி தேவி
RamyaKrishnan – Sridevi : Sivagami Devi


முதலில் இந்த பவர் புல் கதாபாத்திரத்திற்கு நடிகை ஸ்ரீதேவியை தான் முயற்சித்துள்ளார். தளபதி விஜயின் புலி படத்தில் நடிக்க கமிட் ஆகிவிட்டு, பாகுபலி வேண்டாம் என்று முடிவு செய்தார் என்கிறார்கள். அதன் பின் தான் ரம்யாகிருஷ்ணன் நடித்துள்ளாராம்.

பல்லதேவா

ஜான் ஆபிரகாம் தான் முதல் சாய்ஸ். ஸ்கிரிப்ட் கூட அவருக்கு அனுப்பினாராம் ராஜமௌலி ஆனால் அவரிடம் இருந்து பதில் வரவில்லையாம்.
Rana Dagubatti- John Abraham- Vivek Oberoi: Balladeva


விவேக் ஒபேராயுக்கு பல்லதேவா கதாபாத்திரம் பிடித்த பொழுதிலும், பிற படத்தில் பிஸியாக இருந்ததால் வாய்ப்பை நிராகரிக்கும் நிலை வந்ததாம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

கட்டப்பா
Sathyaraj – Mohan Lal: Kattappa


கட்டப்பாவாக நடிக்க மோகன் லாலிடம் கேட்ட பொழுது அவர் வேண்டாம் என்று ரிஜெக்ட் செய்துவிட்டாராம். அதன் பின் தான் சத்யராஜ் அவர்கள் நடித்துள்ளார்.

அவந்திகா

சோனம் கபூர் நடித்திருக்க வேண்டியது, எனினும் இரண்டு வருட கால்-சீட் கேட்டதால் மறுத்து விட்டாராம்.


தேவசேனா

இது ஊர் அறிந்த விஷயம் தான் லேடி சூப்பர்ஸ்டார் நடிக்க மறுப்பு தெரிவித்த பின் தான் அனுஷ்காவிற்கு இந்த ரோல் சென்றது.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!