தென்னிந்திய மொழியிலும் நடிக்க இப்போதைக்கு விரும்பவில்லை: ஜான்வி

ஸ்ரீதேவி, போனிகபூரின் மகள் ஜான்வி கபூர். ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின் ஹிந்தியில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார். இதைத் தொடர்ந்து ஹிந்தியில் அவர் 3 படங்களில் நடித்து வருகிறார். அவர் தமிழ் அல்லது தெலுங்கில் நடிப்பார் என பேச்சு எழுந்தது. தென்னிந்தியாவைச் சேர்ந்த பல இயக்குநர்கள் அவரை அணுகி கதை சொல்லி வந்தனர். போனிகபூர் தமிழ், தெலுங்கு படங்களைத் தயாரிக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அஜித் நடிப்பில் “வலிமை’ படத்தை அவர் தயாரிக்கிறார்.

“பிங்க்’ ஹிந்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கையும் அவர் தயாரிக்க உள்ளார். இந்த இரு படங்களில் ஒன்றில் ஜான்வி நடிப்பார் என பேசப்பட்டது. ஆனால் இது பற்றிய முடிவை ஜான்வியிடமே விட்டு விட்டதாக போனிகபூர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், “”விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்க ஆசை” என ஜான்வி சொல்லியிருந்தார். இதனால் அவர் தெலுங்கில் அறிமுகமாகலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில், “”தமிழ் உள்பட எந்தத் தென்னிந்திய மொழியிலும் இப்போதைக்கு நடிக்க விரும்பவில்லை” என ஜான்வி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!