இது தான் முக்கியம்: பிக்பாஸ் கவின் பேச்சு! அப்போ லாஸ்லியா காதல்?

சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 3வது சீசனில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் கவின்-லாஸ்லியா காதல் தான்.

பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போது அவர்கள் காதலை வெளிப்படையாக கூறியது மட்டுமில்லாமல் திருமணம் செய்துகொள்வது வரை பேசிக்கொண்டனர். ஆனால் தற்போது பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்தபிறகு அவர்கள் அந்த விஷயத்தை பற்றி வாய்திறக்கவே இல்லை.

இந்நிலையில் சமீபத்தில் அதே தனியார் தொலைக்காட்சி நடத்திய கொண்டாட்ட விழாவில் கவின் மற்றும் லாஸ்லியா பங்கேற்று ஜோடியாக நடனமாடியுள்ளனர்.

இதுஒருபுறமிருக்க கவினிடம் ஒருவர் திருமணம் எப்போது என கேட்டதற்கு, “இன்னும் செய்யவேண்டிய கடமைகள் நிறைய பாக்கி இருக்கிறது. முதலில் அது தான் முக்கியம். காதல்-திருமணம் எல்லாம் பற்றிய யோசிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!