அந்த ஹீரோயினுடன் ஒருமுறை.. லொள்ளு நடிகரின் ஆசை..!!


சின்னத்திரையில் லொள்ளு நிகழ்ச்சியின் மூலம் அறிமுமான அந்த நடிகர், பின்னர் வெள்ளித்திரையில் முன்னணி காமெடி நடிகராகவும் வலம் வந்தார்.

இந்நிலையில், தற்போது முழுநேர நடிகராக மாறியிருக்கும் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படங்கள் ஒரளவுக்கு வரவேற்பை பெற்றதாம். அதனைத் தொடர்ந்து அவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறாராம். மேலும் அவரது நடிப்பில் ஒருசில படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன.

இந்நிலையில் நடிகர் பாலிவுட்டின் பிரபல நடிகையுடன் ஒருமுறையாவது நடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறாராம். சமீபத்தில் சர்ச்சைக்குள்ளான பாலிவுட் படத்தில் ராணியாக நடித்திருக்கும் அந்த நடிகையுடன் நடிக்க வேண்டும் என்பது தான் இந்த லொள்ளு நடிகரின் ஆசையாம்.- Source: Maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!