ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தல..!! எப்படி தெரியுமா..?


அஜித் நடிப்பு, சினிமா என்பதை தாண்டி தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். சினிமா நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்து கொள்ளாமல் இருப்பது, சக நடிகர்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்வது என இருப்பார். இந்த நிலையில் நடிகர் ஆர்யன் ஒரு பேட்டியில் அஜித்தை பற்றி கூறியுள்ளார்.

அதில் அவர், ஆழ்வார் படத்தில் அஜித் அவர்களுடன் பணிபுரிந்தேன். அவருடன் நடிக்கிறேன் என்ற விஷயத்தை அரிந்த என் நண்பன் அஜித்தை பார்க்க வேண்டும் என்று கூறினான்.

ஒரு நாள் நான் அஜித் அவர்களிடம் என் நண்பனை பற்றி கூறி போனில் பேச முடியுமா என்று கேட்டேன். அதற்கு அவர் உடனேயே ஓகே சொல்லி என் நண்பனுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுத்தார். நீண்ட நேரம் அஜித்துடன் பேசிய பிறகு என் நண்பன் என்னிடம் இந்த நாளை நான் மறக்கவே மாட்டேன் என்று கூறினான் என்றார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!