நடிகர் விஜயின் தந்தை மீது மோசடி புகார் கொடுத்துள்ள கனடா வாழ் தமிழர்…!

நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மீது கனடா வாழ் தமிழர் மோசடி புகார் கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது, டிராபிக் ராமசாமி படத்திற்காக பெற்ற ரூ.21 லட்சத்தை மோசடி செய்ததாகவும், பணத்தை விஜயின் தந்தை கொடுக்க மறுப்பதாகவும் கனடா வாழ் தமிழர் புகார் கொடுத்துள்ளார்.

மேலும் பணத்தை திரும்ப கேட்டால் மிரட்டல் விடுப்பதாகவும், ரூ.21 லட்சம் பணத்தை எஸ்.ஏ.சியிடம் இருந்து பெற்றுத் தருமாறு காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் எங்களை பார்த்தால் அரசாங்கமே மிரளும் என்று கூறுகிறார் எஸ்.ஏ.சி என கனடா வாழ் தமிழர் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!