இந்த விஜய் தெரிந்து தான் செய்கிறாரா, இல்லை தெரியாமல் செய்கிறாரா?

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அளித்துள்ள பேட்டியை பார்த்தவர்கள் விஜய் தெரிந்து செய்கிறாரா, தெரியாமல் செய்கிறாரா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவியில் நடிக்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அளித்துள்ள பேட்டி குறித்து தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பிள்ளைகள் செக்ஸ் வைத்துக் கொள்ள பெற்றோர்கள் அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று கங்கனா கூறியதை கேட்டுத் தான் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கங்கனா மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுவார் என்பது பாலிவுட்காரர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் செக்ஸ் பற்றி இந்த அளவுக்கு ஓபனாக பேசுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை.

மேலும் தனக்கு 16, 17 வயது இருந்தபோது 28 வயது நபருக்கு முத்தம் கொடுக்க தன் கையில் முத்தமிட்டு பயிற்சி எடுத்ததாகவும், பள்ளியில் படித்தபோது ஆசிரியர் மீது கிரஷ் ஏற்பட்டதாகவும் கங்கனா தெரிவித்துள்ளார்.

நாடே பார்த்து வியந்த ஜெயலலிதாவாக நடிக்க கங்கனாவை விட்டால் இந்த இயக்குநர் ஏ.எல். விஜய்க்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா என்று கோலிவுட் ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். கங்கனாவின் நடிப்பை யாரும் குறை சொல்ல முடியாது.

ஒரு கதாபாத்திரம் கொடுத்தால் அதுவாகவே மாறிவிடுவார். அது எல்லாம் சரி. ஆனால் அடிக்கடி ஏதாவது சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருப்பதால் தான் இவரை போய் ஜெயலலிதாவாக நடிக்க வைக்கணுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஏ.எல். விஜய் ஒரு கிரியேட்டர். அவருக்கு கங்கனாவை பற்றி நன்கு தெரியும். அப்படி இருந்தும் அவர் கங்கனாவை தேர்வு செய்துள்ளார் என்றால் நிச்சயம் ஏதாவது காரணம் இருக்கும். பொறுத்திருந்து பார்ப்போம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!